கார்த்திகை மாதம் மூன்றாவது வாரம் குமரகுடி கிராமத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் திருக்கோவிலுக்கு கிடா வெட்டு திருவிழா வருடம் தோறும் நடைபெறும் வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுவாமி கிரகம் பாலித்து அம்மன் திருவீதி உலா வந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் திங்கள்கிழமை மாரியம்மன் வீட்டு பூஜை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை ஆன இன்று கெடா வெட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அதற்கு முன்னதாக பெரியண்ணன் சுவாமி அருவா மீது ஏறி பொதுமக்களுக்கு அருள்வாக்கு கூறினார்.அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் நிறைவேற்றும் விதமாக கிடா வெட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
அதனைத் தொடர்ந்து சுவாமி ஊர்வலம் ஒவ்வொரு வீடாக சென்று அருள் வாக்கு கூறுவதும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக உற்சாகமாக கொண்டாடினர். அப்பகுதி இளைஞர்கள் மேளதாளத்துடன் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாளைய தினம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுவாமி விடையேற்றும் நிகழ்ச்சி நடைபெறும் அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.பழமை மாறாத இத்திருவிழா இக்கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது