திருச்சி கேர் அகாடமியில் சிகரம் நோக்கி எனும் கல்வி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கேர் அகாடமியின் ஆண்டாள் தெரு மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கேர் அகாடமி இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ் செல்வன் தலைமைவகித்தார். டாக்டர் தமிழன்பன் வரவேற்புரை ஆற்றினார்- .
சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, பிரபல கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் நீட் மாணவர்கள் மற்றும் TRB ஆசிரியர்களுக்கு தன்னம்பிக்கையை விதைத்திடும் விதமாக “வல்லமை தாராயோ” எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற எஸ்.பி கலியமூர்த்தி உரையாற்றினார். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி “அறிவியல் வசப்பட” எனும் தலைப்பில் அடுத்த 20 ஆண்டுகளில் அறிவியலில் ஏற்பட இருக்கும் மாற்றங்களையும், எதிர்கொள்ளும் முறைகளையும் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியை கிருஷ்ணவேணி முத்தமிழ் செல்வன், டாக்டர் சுகந்தி, டாக்டர் உதயகுமார், டாக்டர் கமலகண்ணன், ஆசிரியர் பால்பாண்டி, ஆசிரியர் முனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இயற்பியல் ஆசிரியர் ரிஷிகேசவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கேர் அகாடமியில் படித்து நீட் தேர்வு மூலம் இந்த ஆண்டு மருத்துவரான மாணவர்கள், TNPSC-ல் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவர்கள், கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வென்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய PG TRB தேர்வில் வென்று அரசு ஆசிரியர்கள் ஆனோர் என நூற்றுக்கணக்கானோர் கௌரவிக்கப்பட்டனர்.