திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சி இடத்தில் மனு அளித்தனர்.அம்முனுவில் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்துள்ள தெற்கியூர் கிராமத்தில் உள்ள வளத்தாயி அம்மன் கோவில் திருவிழாவில் ஆண்டாண்டு காலமாக பட்டையதாரர் திருக்கோவிலிருந்த திருமுகம் (அழைப்பிதழ், அனுப்பப்படும். இந்த ஆண்டு வழக்கத்தின் படி. திருமுகம் அனுப்படவில்லை. மேற்படி, திருவிழாவை தொடர்ந்து சாமியை வீட்டு வீடு கொண்டு சென்று கிடா வெட்டுதல் நடைபெறும்.

ஏற்கனவே, இது சம்மந்தமாக வழக்கு 1943-ல் நடைபெற்று தெற்கியூருக்கு சாதகமான தீர்ப்புவந்தது. அதன்படி சென்று ஆண்டு வரை நடைமுறையில் வந்தது. ஆனால், இந்த ஆண்டு தெற்க்கியூர் கிராமம்த்திற்கு சாமி அனுப்பாமல் புறக்கணிக்கப்பட்ட உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுந்து தீர்வுகாணுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், நாளை வளத்தாயி அம்மன் கோவில் திருவிழவிற்கு காப்புகட்டுதல் நடைபெறவுள்ளது. எனவே, எங்களுடைய உரிமையை பாதுகாத்து உதவிடுமாறு கிராம பொது மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறோம் என அம்மனுபில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புறநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில்:- விழா தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டபோது திருப்பஞ்சலி கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் எங்கு வேண்டுமானலும் சென்று தெரிவித்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனர். இதில் சுமார் 600 குடும்பங்கள் சுவாமி கும்பிடுவதில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *