திருச்சி மேற்கு உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் உள்ள வார்டு எண் 25 சண்முகா நகரில் மாநகராட்சியின் சார்பில் ரூபாய் 10 இலட்சமும், சண்முகநகர் நலச் சங்க பொதுமக்களின் பங்களிப்புத்தொகை ரூபாய் 5 இலட்சமும் என ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் 85 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டதை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், வார்டு 25 சண்முகா நகர் பகுதியில் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தமிழக நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
மேலும் சண்முகா நகர் நலச்சங்க தலைவர் வேலாயுதம் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அமைச்சர் கே என் நேருவிடம் குடிநீர் தேக்க தொட்டியும் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை அமைத்திட கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து குடிநீர்த் தேக்க தொட்டிக்கான இடத்தை ஆய்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் கூடிய விரைவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் அன்பழகன் கமிஷனர் வைத்தியநாதன் சண்முகா நகர் நலச்சங்க செயலாளர் குமரன் பொருளாளர் அல்போன்ஸ் உப தலைவர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.