திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகன் உள்ளிட்ட நால்வரும் முகாமில் தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி உண்ணாவிரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முகாமிற்கு நேரடியாக வருகை தந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

 

அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசிய நளினி, ‘தனது மகள் லண்டனில் வசித்து வருவதாகவும், எனது கணவர் முருகனை லண்டனுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு மாவட்ட ஆட்சியர், உங்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக மனுவாக தரும்படி கூறியுள்ளார். அதையடுத்து, நளினி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முன்னதாக சிறைவாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய நளினி, “சிறப்பு முகாமில் உள்ள நால்வரையும் சந்தித்து பேச உள்ளதாகவும், சிறப்பு முகாமில் முருகன் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருப்பது குறித்து எனக்கு தெரியாது” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *