திருச்சி ஜாஃபர்ஷா தெரு, டைமண்ட் பஜார் ஓமந்த பிள்ளை சந்து பகுதியில் ஸ்ரீ மகா சித்தி விநாயகர் நண்பர்கள் குழு சார்பில் 15 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவானவது கடந்த 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் தொடங்கி நேற்று குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் தங்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை தோஷம் நீங்கவும், உலக நன்மை வேண்டியும் மாணவ மாணவிகளின் கல்வி அறிவு மேம்படவும் நோயில்லா வாழ்க்கை வாழ வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் இந்த குத்து விளக்கு பூஜையில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டனர்.