சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி திருச்சி மேலப்புதூர் ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து மருத்துவத்துறை சமூக சேவை மற்றும் தொழில்துறையில் சாதனை படைத்த 33 பெண்களுக்கு சாதனைப் பெண்கள் 2023 என்கிற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜோசப் கண் மருத்துவமனை நடைபெற்ற முதலாம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபையின் பிஷப் டாக்டர் எஸ்தர் சாம்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் லட்சுமி பிரபா மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா ஆகியோர் சாதனை மகளிருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர். விழாவின் முக்கியத்துவத்தை ஆர்த்தி ராஜேஷ் எடுத்துரைத்தார் மேலும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுபா பிரபு செய்திருந்தார்.