திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்காஸ்) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறிய போது, “எனது குடும்பத்தில் மாதாந்திர நகைச் சீட்டுகள் போட்டு தான் நகைகளை வாங்குவார்கள். அந்த வழக்கத்தை நானும் தொடர்ந்து செய்து வருகிறேன்.
பெண்களுக்கு நகை மிகவும் பிடிக்கும். எனக்கும் நகைகள் ரொம்ப பிடிக்கும். நான் திரைப்பட நடிகையாக இருந்த போதிலும், சிறுக சிறுக பணம் சேமித்து வைத்து நகைகளை வாங்கும் பழக்கத்தை கைவிடவில்லை. செய்கூலி சேதாரம் இல்லாமல் நகைகள் வாங்குவது எப்படி : மாதாந்திர நகை சீட்டுகள் மூலம் செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகைகளை வாங்கலாம். அதாவது, நகைச் சீட்டுகள் வாங்கும்போது, நகைகளுக்கான செய்கூலி, சேதாரம் குறையும்” என தெரிவித்தார்
மேலும், “எனக்கு ‘நடிப்பு அரக்கி’ என்ற பட்டமெல்லாம் தேவையில்லை. மக்கள் என்னை பாராட்டுவது தான் எனக்கு கிடைக்கும் உண்மையான பட்டம்” என்று தெரிவித்தார் புதிதாக நிறைய திரைப்படங்கள் நடித்து வருகிறேன் . இந்த ஆண்டும் நிறைய திரைப்படங்கள் வெளியானது உங்களுக்கு எப்போது திருமணம் என்ற செய்தியாளர் கேள்விக்கு திருமணம் அப்புறம் பாரத்து கொள்ளலாம் என பேசினார்.