தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மாநில தலைவர் விக்ரம ராஜா மற்றும் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு ஆகியோர் தலைமையில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அனேக காலமாக தமிழகம் மட்டுமல்லாது அகில இந்திய அளவில் பெருகிவரும் கார்ப்பரேட் கம்பெனிகள் சில்லரை வணிகத்தை கபளீகரம் செய்து வருகின்றன சில்லரை வணிகத்தில் சூப்பர் மார்க்கெட் மளிகை வணிகம் மட்டுமல்லாமல் சிறு குரு நடுத்தர வணிகர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரும் அளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சில்லறை வணிகர்கள் அடியோடு அழியும் நிலை உருவாகி வருகிறது இது சில்லறை வணிகர்களுக்கு எதிரான கார்ப்பரேட் தீவிரமாக கருதப்படுகிறது மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக விழித்து எழுந்து பாரம்பரிய இந்திய சில்லறை வணிகத்தை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இது தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக அடித்தட்டு வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிப்பதோடு அனைத்திந்திய அளவில் பொருளாதார சரிவிக்கும் வழி வகுத்து விடும் .

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் உள்ளூர் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதை எதிர்த்து ஏற்கனவே திருச்சியில் இரண்டு கிளைகளுடன் இயங்கி வரும் கார்ப்பரேட் நிறுவனமான டி-மார்ட் தற்போது ஒரு லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவில் திருச்சி வயலூர் ரோடு வாசன் வேலி பகுதியில் அமைந்து வரும் புதிய கிளை முன்பாக மாபெரும் முற்றுகை போராட்டமானது வருகின்ற 30ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்தார். இது முற்றுகைப் போராட்டமாக மட்டுமில்லாமல் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் போராட்டமாகவும் சில்லறை வணிகத்தை நிலை நிறுத்தும் போராட்டமாகவும் அகில இந்திய அளவில் கார்ப்பரேட் தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் போராட்டமாகவும் இருக்கும் என தெரிவித்தார். போராட்டத்திற்கு திருச்சி மாவட்டத்திலுள்ள நிர்வாகிகள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பேரமைப்பின் தலைமை நிர்வாகிகள் மண்டல தலைவர்கள் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட்ட ஆயிரம் கணக்கானோர் இம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் .இது ஒரு மாபெரும் வெற்றி போராட்டமாகவும் சில்லறை வணிகர்களை பாதுகாக்கும் முயற்சியில் முதல் வெற்றியாகவும் இந்த போராட்டம் அமையும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பும் வணிகர்களும் ஆதரவு நல்கிட வேண்டுகிறோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்