பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்மலை திரு இருதய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்மலைப்பட்டி அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி காட்டூர் அரசு ஆதி திராவிட நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளி காட்டூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி திருவெறும்பூர் பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கைலாசபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசங்குடி குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவாக்குடி மலை அரசு மேல்நிலைப்பள்ளி, துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, தேனேரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, சோழமாதேவி விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் ஆண்கள் 589 பெண்கள் 1043 மொத்தம் கூடுதல் 1632 ஆகிய மிதிவண்டிகள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி , முதன்மைக்கல்வி அலுவலர் . கோ.கிருஷ்ணப்பிரியா மண்டலகுழுத்தலைவர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் தர்மராஜ் ரமேஷ், நீலமேகம் சிவக்குமார் தாஜுதீன் கழக நிர்வாகிகள் காயம்பு தங்கவேலு செல்வராஜ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும் போது.., பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொலை செய்திருக்கும் கூடிய சம்பவம் கண்டிக்கத்தக்கது படிக்க வரும் மாணவிக்கு இது போன்ற நிகழ்வு பெற்றோர்கள் மனநிலைமையில் இருந்து பார்க்கும்போது வேதனையை தருகிறது சொந்த காரணத்திற்காக இந்த கொலை நடந்திருந்தாலும் கூட கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. 20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு மிக விரைவாக வழங்கப்படும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பழியை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு குழந்தைகள் எந்த விதமான போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என மகிழ் முட்டம் என்ற திட்டம் கொண்டு வந்து உள்ளோம்.

இந்த சம்பவத்தில் இரும்பு கரம் கொண்டு தடுத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர். TET தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நாங்கள் வைத்துள்ளோம் யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் உள்ளே கொண்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறோம். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறோம் வளர்ச்சியில் இரட்டை இலக்கை வளர்ச்சி அடைந்த மாநிலம் தமிழகம் இதன் காரணமாகத்தான் பெருமையாக சொல்கிறார்கள் ஆனால் அந்த வளர்ச்சியையும் தடுக்கிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் என்பது தூண்டுதல் கிடையாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என என பிரதமர் கூறுவது ஒவ்வொரு முறையும் அவர் கூறிக் கொண்டுதான் இருக்கிறார் ஆனால் மக்கள் கண்காணித்து வாக்களிப்பார்கள் என்றார்.
