உலக கண்ணீர் அழுத்த விழிப்புணர்வு தினமாக மார்ச் மாதம் 2வது வாரத்தில் அனுசரிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பாக கண்ணி நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமை மருத்துவர் அர்ச்சன தெரேசா அளித்த பேட்டியில்:- குளுக்கோமா அதாவது கண் நீர் அழுத்த நோய் உலகளவில் மக்களிடம் சரி செய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. குளுக்கோமா பார்வையை மெதுவாக குறைய செய்யும் பெரும்பாலான மக்களுக்கு அந்த நோயால் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை எனவே, சிறிது சிறிதாக பார்வை இழப்பு ஏற்படுகிறது.

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கிட்ட பார்வை சர்க்கரை நோய், கண்ணில் காயம், தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவோர் மற்றும் குடும்பத்தில் ரத்த வழி உறவினர்களுக்கு குளுக்கோமா நோய் இருப்பது ஆகியோர்களுக்கு குளுக்கோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளுக்கோமாவுக்கான சிகிச்சை முறைகள் கண் சொட்டு மருந்து, லேசர் மற்றும் அறுவை சிகிச்சை ஆகும். திருச்சி தி ஐ பவுண்டேஷனின் சாதனைகளின் சிறப்பம்சங்களில் கண் அழுத்தத்தாலும், கண்புரையாலும் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதி சேர்ந்த ராஜு என்கிற 106 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் தனது பார்வையை திரும்ப பெற்றவராக தனது தேவைகளைத் தாமாகவே கவனித்து கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்