திருச்சி தென்னூர் மீர் ஹசனுல்லா ஷா தர்காவிற்கு சொந்தமான இடத்தினை போலி பத்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக கைப்பற்றியவர்களுக்கு எதிராக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கிய நீதிமன்றத் தீர்ப்பினை காவல்துறை நடைமுறைபடுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் தென்னூர் அரசமரம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் நிசார் தலைமை தாங்கினார்.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணன் மற்றும் திருவரங்கம் பொருப்பாளர் அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நிர்வாகிகள் கோஷம் மற்றும் ரிச்வான் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் கிளை பொறுப்பாளர்களும், நாம் தமிழர் கட்சியினர் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.