திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் திருச்சி மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்து நாடு முழுவதும் சமசீரான வளர்ச்சியே உருவாக்கி உதவுவதடன் நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதி நிலையை அறிக்கையாக தெரியவில்லை
மாறாக தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்கள் மட்டுமே நிதி நிலையை தாராளமாக அளித்து கொடுத்தும் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலம் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த நாட்டின் மத்திய அரசு நிதிநிலை அறிக்கை அமைத்திருக்கின்றது. இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, ஆர்ப்பாட்டத்தில் முடிவில் பகுதி செயலாளர் மோகன் நன்றியுரை ஆற்றினார். பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.