திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தேசிய கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்லூரி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் உயர்த்தி உள்ளதாகவும். இதனால் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் இங்கு ஏராளமானோர் பயின்று வரும் நிலையில்,
5 வருடத்திற்கு முன்பு 8 ஆயிரம் ரூபாய் என இருந்த கல்லூரி கட்டணத்தை ஒரு செமஸ்டர் கட்டணம் தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதால் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் உடனடியாக கல்லூரி கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கல்லூரி செமஸ்டர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டதால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.