திருச்சி 45வது வார்டு பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் வழியில் வார சந்தை நடைபெறுவதை ரத்து செய்ய வலியுறுத்தி சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில் இன்று காலை திருச்சி மாநகராட்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி வார்டு எண் 45 பகுதியில் உள்ள பொன்னேரிபுரம் நத்தமாடிப்பட்டி செல்லும் பாதை மிகவும் குறுகிய பாதை இந்தப் பாதையில் வார சந்தை அமைக்கப்பட்டுள்ளது இந்த வார சந்தையால் பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இது குறித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் பல்வேறு முறை மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் இடம் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதனால் இன்று திருச்சி மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர் .
இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இனி இப்பகுதியில் வார சந்தை நடைபெறாது என வாக்குறுதி அளித்ததின் பேரில் இந்த ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர் மேலும் இது குறித்து கோரிக்கை மனுவை மாநகராட்சி அதிகாரிகளிடம் இன்று வழங்கினர் இந்த நிகழ்வின்போது தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரமணா கிழக்கு மாவட்ட செயலாளர் ஷைனி, மக்கள் உரிமை கூட்டணி மாவட்ட அமைப்பாளர் தனபால், மக்கள் சமூக பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவர் காமராஜ் கீழக்குறிச்சி பொதுச்செயலாளர் டொமினிக் ரோமியோ ஆகியோர் உடன் இருந்தனர்.