திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை கடந்த மே மாதம் 9 ஆம் தேதி தமிழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு புதிய பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையத் மது பாலன், திருச்சி காவல் ஆணையர் காமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.