திருச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி புனித நீர் எடுத்துவரப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் நாலாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 9 மணி அளவில் மகாபூர்ணாஹூதியும்,
அதனை தொடர்ந்து 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.