திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளியே வந்த ரயில் பயணி ஒருவர் மாஸ்க் அணிந்தபடி சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடைமைகளை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத தங்க நகைகள் மற்றும் பணக்கட்டுகள் இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அடிப்படையில் அங்கு வந்த வணிகவரித்துறை அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில்.
உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத பணத்தை எடுத்து வந்தவர் மதுரை சேர்ந்த லட்சுமணன் என்பதும் அவரிடம் 2 கிலோ 750 கிராம் தங்க நகைகள் இருப்பதும் அதன் மதிப்பு ரூபாய் 1 கோடியே 89 லட்சம் என்பது மேலும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் 15 லட்சம் இருப்பதும் கண்டறியப்பட்டது மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.