அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர், மாவட்டம் பாலக்கரை பகுதி சார்பில் அதிமுக கழகத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர், மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர் வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்லின், ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவி சபீனாபேகம் மீரான் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாசறை செயலாளர் பரமசிவம் பேசுகையில்:-மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் தாலிக்கு தங்கம் அம்மா சிமெண்ட் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை இந்த திமுக அரசு நிறுத்தியது. மேலும் தமிழக முழுவதும் மதுபான கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிவிட்டு அதிகப்படியான மதுக்கடைகளை திறந்துள்ளது. இதனால் தற்போது திமுக ஆட்சியில் இந்த தமிழகம் தள்ளாடும் தமிழகமாக மாறி வருகிறது. அதிமுகவை சேர்ந்த ஒவ்வொருவரும் திமுகவின் அராஜக போக்கை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவினர் களப்பணி ஆற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்..