திருச்சி உறையூர் கடைவீதி சின்ன சௌராஷ்ட்ரா தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவில் சார்பாக 26 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி உற்சவ விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 18ஆம் தேதி கணபதி ஹோமம் விசேஷ அபிஷேகம் சந்தன காப்பு அலங்காரம் விசேஷ பூஜையுடன் தொடங்கியது. மேலும் விநாயகருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சிந்தனையாளர் பிரிவு மாவட்டத் தலைவர் தினகரன் தலைமையில் பொதுமக்களுகாகு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் மாநில செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் விநாயகரை பிரதிஷ்ட்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று திருச்சி காவேரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.