திருச்சி புதுக்கோட்டை சாலை மோராய் சிட்டி பகுதியில் உள்ள பி.வி.எம் குளோபல் திருச்சி பள்ளியில் ரோபோட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது இந்த பயிற்சி முகாமை திருச்சி ராக்போர்ட் சிட்டி சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் வழி நடத்தியது மேலும் சாஸ்தரா பல்கலைக்கழக தொழில் நுட்ப வல்லுநர்கள் விர்ச்சுவல் ரியாலிட்டி குறித்த வகுப்பினை மாணவர்களுக்கு கற்பித்தனர் இந்நிகழ்வை பிவிஎம் குளோபல் திருச்சி பள்ளியினர் இணைந்து ஒருங்கிணைத்தனர்.
இந்த பயிற்சி முகாமிற்காக சென்னையிலிருந்து வந்த சிறப்பு மிகு பயிற்சி வந்துள்ளார்கள் பள்ளி மாணவர்களுக்கு இப்ப பயிற்சியினை ஆசிரியர்கள் சுரேஷ் மற்றும் தனசேகர் ஆகியோர் வழி நடத்தினர் இந்த பயிற்சி முகாமிற்கு திருச்சி பி வி எம் குளோபல் பள்ளி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார்.
இந்த ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி முகாமில் 14 பள்ளிகளுக்கும் மேற்பட்ட நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மற்றும் 11ஆம் வகுப்புகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டனர்.
மேலும் மாணவர்களோடு வந்திருந்த பத்திற்கு மேற்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.