திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பாக மண்டல அளவிலான **”Code to Creation”** 2025 என்ற தலைப்பில் திட்ட கண்காட்சி கல்லூரி வளாகத்தில் உள்ள மல்டிபர்பஸ் ப்ளாக் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத்தலைவர் டாக்டர் ஐசக் ஞானராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் உபேந்திரன், டாக்டர் ஜெயச்சித்ரா, டாக்டர் சதீஷ் குமார், மற்றும் மோகன்தாஸ் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, தேர்வாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு திட்டத்தையும் கவனமாக மதிப்பீடு செய்தனர். மேலும் புதுமை, தொழில்நுட்ப செயலாக்கம், பிரச்சினை தீர்வுக்கான அணுகுமுறை, மற்றும் விளக்கக்கூற்றின் தரம் ஆகிய முக்கியமான அளவுகோள்களின் அடிப்படையில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவர்கள் தங்கள் திட்டங்களை விளக்கி, எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை பகிர்ந்துகொள்ளும் நேரடி கலந்துரையாடல்கள் நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மொத்தம் 29 குழுக்கள் பங்கேற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு புதுமைமிக்க சிந்தனை, தொழில்நுட்ப முன்னேற்றம், மற்றும் உண்மையான உலக சவால்களைத் தீர்ப்பதற்கான திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை துணை பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் மாணவர்கள் நந்து கிருஷ்ணா, முகமது அப்சல் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பாக அமைந்ததுடன், சிந்தனை திறன், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மற்றும் பிரச்சினை தீர்வுக்கான திறன்களை மேம்படுத்த உதவியாக இருந்தாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.