திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சர்வதேச தொடர்புகள் துறையின் சார்பில், சர்வதேச கல்வி கனவுகள் மையத்தின் துவக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பொன்விழா கட்டிட கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியின் சர்வதேச தொடர்புகள் துறையின் துணைத் தலைவர். முனைவர். மைக்கேல் டேவிட் பிரேம் குமார் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சர்வதேச தொடர்புகள் துறையின் டீன் ராஜ் குமார், அசோசியேட் டீன் மைக்கேல் டேவிட் பிரேம்குமார் மற்றும் கல்லாரியின் சர்வதேச தொடர்புகள் துறையின் துணைத் தலைவர் முனைவர். சோபர்ஸ் ஸ்மைல்ஸ் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வின் தொடக்க உரையை, ஜப்பான் நாட்டில் உள்ள ரோலெக்ஸ் கடிகாரம் கம்பெனியின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி, நடராஜன் தக்ஷிணாமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்க உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அவைகளை மேம்டுத்தினால் வாய்ப்புகள் தானாக மாணவர்களை வந்தடையும் என்று கூறி ஊக்கப்படுத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து சர்வதேச தொடர்புகள் துறையின் தலைவர். முனைவர். ராஜ்குமார், மேற்படிப்பிற்காக வெளிநாடுகள் செல்லும் போது, ஏற்படும் தேவைகளையும் இதற்கு இந்த சர்வதேச கல்வி கனவுகள் மையம் எவ்வாறு உதவும் என்று தெளிவு படுத்தி பேசினார்.

விழாவில் கல்லூரி துணை முதல்வர். முனைவர்.சத்தியசீலன், வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவிற்கு, பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர், முனைவர். பிரின்சி மெர்லின் தலைமை தாங்கி, தலைமை உரையாற்றினார். அந்த உரையில் மேற்படிப்புக்கு வெளிநாடுகள் செல்ல எவ்வாறு தயார் ஆக வேண்டும் என்றும், வாய்ப்புகளை மாணவர்கள் எவ்வாறு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி உரையாற்றினார். இந்த விழாவில் தமிழகமல்லாத பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சர்வதேச தொடர்புகள் துறையின் ஒருங்கிணைப்பாளர் டீன் டேவிட் சாம் பால் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *