திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் மாணவர் நலத்துறை மற்றும் மனநல ஆலோசனை மையம் சார்பில் திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள தூய தோமையர் கருணை முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி பேராசிரியை தேவசேனா வரவேற்புரை வழங்கினார்.
பிஷப் ஹீபர் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் மாணவர் நலத்துறையின் துணைத் தலைவர் முனைவர் அலெக்ஸ் ராஜ்குமார் பால் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை வழங்கினார் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் கிறிஸ்து பிறப்பு பாடல்கள் பாடி முதியோர்களை மகிழ்வித்தனர் தொடர்ந்து கல்லூரியின் சார்பாக ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் கேக் ஆகியவற்றை முதியோர் இல்லத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மேலும் கருணை இல்லத்தில் உள்ள முதியோர்களால் கிறிஸ்து பிறப்பு பற்றிய ஆடல், பாடல் மற்றும் குறு நாடகம் நடத்தப்பட்டது . இறுதியாக திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் மனநல ஆலோசகர் டேவிட் சாம்பால் நன்றியுரை வழங்கினார்.