திருச்சி தில்லைநகர் பெரிய வடவூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லைநகர் நண்பர்கள் குழு சார்பில் மாபெரும் அன்னதான விழா தில்லை நகர் 10-வது கிராஸ் பகுதியில் இன்று நடைபெற்றது.
இந்த அன்னதானத்தை முன்னாள் திமுக தில்லை நகர் பகுதி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அருகில் வடவூர் முருகா, திமுக 22 ஆவது வட்ட துணை செயலாளர் தில்லை ஆறு, வடவூர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.