தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது. திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தமதுபாலன், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024ல் ரூ.202.11 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2025க்கு 5.275.00 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸில் மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப இரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன், மேலாளர், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கோபி, அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் விழா ஏற்பாடுகளை திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சங்கர், சிறப்பாக செய்திருந்தார்