திருச்சி பொன்னகர், செல்வநகர் காமராஜபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 16-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ஆற்றில் இருந்து பூ கொண்டு வரப்பட்டு பூச்சொரிதல் விழாவும் அதனை தொடர்ந்து இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இன்று 23-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து இதில் ஏராளமான பக்தர்கள், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கருமண்டபம் கோரை ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வந்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லாக்கில் அம்மன் வீதி உலா கோவிலை வந்தடையும்.
நாளை 24-ந் தேதி காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் , பிற்பகல் மதியம் மாபெரும் அன்னதானமும் நடைபெறும். இரவு 8 மணிக்கு மாபெரும் கலை நிகழ்ச்சி நடைபெறும். 25-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) சந்தனகாப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜையும் மற்றும் கஞ்சி காய்ச்சி ஊற்றுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை அம்மன் வீதி உலா வந்து கோரை ஆற்றுக்கு சென்றடையும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் மற்றும் காமராஜபுரம் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.