அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, குடிநீர் வரி வசூலித்தும் மக்களுக்கு முறையான சுத்தமான குடிநீர் வழங்காமல் தரமற்ற குடிநீரை விநியோகித்து மக்களை கொல்வதை தடுத்திட வேண்டும், வார்டுகள்தோறும் தரமற்ற கலங்கலான குடிநீர் வழங்காமல் புதிய குழாய்கள் அமைத்து, சுத்தமான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எதேச்சை ஆட்சிஅதிகாரத்துடன் உறையூர் காசி விளங்கி மீன் மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்களுக்கு பத்து ரூபாய் முதல் 100ரூபாய் வரையிலும் கட்டணகொள்ளை வசூலித்து மக்களின் வயிற்றிலடிக்கும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை கண்டித்தும், மந்தகதியில் நடைபெற்றுவரும் திருச்சி மாரிஸ் தியேட்டர் மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும்,
மத்திய மாநில அரசுகள் மரக்கன்றுகள் நடவும் இயற்கையை மேம்படுத்தவும் வலியுறுத்தும் வகையில் பஞ்சப்பூரில் மக்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட பசுமை பூங்காவை அழித்து புதிதாக மார்க்கெட் அமைப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்றையதினம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜங்ஷன் பகுதி செயலாளர் வெங்கட்ரமணி தலைமையில், தலைமை நிலைய செயலாளர், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர், ராஜசேகரன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் ராமலிங்கம், மாவட்டத் துணைச்செயலாளர் தன்சிங், பொதுக்குழு உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி உள்ளிட்ட மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், வட்டச்செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.