திருச்சி மந்தியசிறையில் சுமார் 1700-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் வெளியில் செய்த குற்றங்களை நினைத்தும், தனது குடும்பத்தினருடைய சூழ்நிலையை நினைத்தும், மன அழுத்கத்துக்குள்ளான சிறைவாசிகளது மனஅழுத்தத்தை போக்கவும் சிறைவாசிகளது உடல்நலத்தை பேணிக்காக்கவும், தினசரி யோகா பயிற்சி அளித்தால் நலமானதாக இருக்குமென கருதி,
காவல்துறை இயக்குநர் / தலைமை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் நுறை அம்ரேஷ் புஜாரி, உத்தரவின்படியும் ஒவ்வொரு ஞாயிறு நீங்கலாக தினசரி காலை 06.30 மணி முதல் 07.00 மணி வரை அனைத்து சிறைவாசிகளுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த யோகா பயிற்சியின் மூலம் சிறைவாசிகளின் மன அழுத்தம் குறைவாய்ப்புள்ளதாகவும் சிறைவாசிகளுக்கு இது பயன் உள்ளதாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தனர்