திருச்சி மத்திய வடக்கு மாவட்ட திமுக செயற்குழு மற்றும் திமுக கழகத்தின் சார்பு அணிகளின் மாவட்டம் மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக இந்தியாவே வியக்கும் வண்ணம் திராவிட மாடல் ஆட்சி செய்து அடிதட்டு மக்கள் முதல் அறிஞர்கள் வரை பாராட்டும் நெ.1 முதல்வர் கழக தலைவர் தளபதி அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட, மாநகர அணைத்து ஒன்றிய, நகர, பகுதி பேரூர், கிளைக்கழகங்கள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் பொதுக்கூட்டங்கள் நடத்தி மிகவும் சிறப்பாக நமது மாவட்டத்தில் கொண்டடுவது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அன்னை தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்கும் வகையில் மும் மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழ் நாட்டிற்கு நிதி கிடையாது என அறிவித்த மோடி அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சவுந்தர பாண்டியன், கதிரவன், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜி முத்து செல்வம் மற்றும் மாநில மாவட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.