திருச்சி மாநகர் பகுதிகளில் மாரிஸ் பாலம், ஜங்ஷன் பாலம் , பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்டவை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறியும் மேலும் பல்வேறு வரிகள் கடுமையாக உயர்த்த பட்டுள்ளதாக கூறி திருச்சி மாநகராட்சியையும் தமிழக அரசையும் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் 1000 க்கு மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு எதிராகவும் , திமுக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது காவல்துறையினர ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறி ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
இதனால் முன்னாள் அமைச்சர் RB உதயகுமார், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினரை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் கவுன்சிலர்கள் அரவிந்த், அம்பிகாபதி, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு,
திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், ஜெயராமன் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது