திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தீண்டாமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது அதன்படி தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி தலைமையில், ஆணையர் சரவணன் முன்னிலையில் உறுதிமொழியை படிக்க அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்வில் நகர பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்