திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அந்தநல்லூர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமுகாம் இன்று நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகு தலைமையில் நடைபெற்ற முகாமிற்கு வட்டாமரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், ஸ்டான்லி ராஜசேகர். மேற்பார்வையாளர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீரங்கம் கோட்டம் வட்டாசியர் ரவிசங்கர், அந்தநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் துரைராஜ், அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் மகேஷ், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆதிசிவன், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றிய கிராம நிர்வாக அலுவலர் பத்மா, முத்தரசநல்லூர் வார்டு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்.இந்த மருத்துவ முகாமில் கண்மருத்துவர் பொன்மலர் காது மூக்கு தொண்டை மருத்துவர் ஆனந்த குமார், மனநல மருத்துவர் அன்பழகன், முடநீக்கியல் மருத்துவர் செல்வகுமார் ஆகியோர் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பரிசோதித்து தேவையான அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரைத்தனர்.
அதேபோல் RBSK மருத்துவர்கள் ஸ்ரீராம்குமார், அர்ச்சனா ஆகியோர் முகாமிற்கு வந்திருந்த குழந்தைகளை பரிசோதித்து தேவையான மருத்துவ வசதி பெற வழிவகை செய்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்திருந்த முகம்மது முகாமில் கலந்து கொண்டு முதலமைச்சரின் காப்பீட்டிற்காக விண்ணப்பங்களைப் பெற்று பதிவேற்றம் செய்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் மாற்றுத்திதறனுடைய மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கினார். மேலும் நலவாரியம், UDID, உபகரணங்கள் மற்றும் பிற வகை அரசு உதவிகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களையும் வழங்கினர்.
முகாமில் அனைத்து வகை மாற்றுத்திறன் கொண்ட 136 குழந்தைகள் பயன்பெற்றனர். 23 மாணவர்கள் தேசிய அடையாள அட்டைப் பெற்றனர். 26 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களுக்கான அளவீடு மற்றும் அதற்கான பரிந்துரையும் செய்யப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பயணப்படி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையாளர், ஆசிரியப் பயிற்றுநர்கள், ஒன்றிய கணக்காளர்கள் மற்றும் சிறப்புப் பயிற்றுநர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்