திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் மெக்டொனால்ட் சாலையில் கலையரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு சிவானி கல்விகுழும தலைவரும், தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் செயலாளரும், அகில இந்திய சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் பொருளாளருமான செல்வராஜ் தலைமை தாங்கி புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.
இவ்விழாவில் என்ஜினீயர் சுதீஷ் இந்திய கட்டு மான பொறியியலின் தந்தை பாரத ரத்னாசர் விஸ்வேஸ்வரய்யாவின் உருவப்படத்தை திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க தலைவர் என்ஜினீயர் சதீஸ்வரன் வரவேற்றார். இதில் சங்க கவுரவ தலைவர்கள் சக்திவேல், ஜெயக்குமார், உடனடி முன்னாள் தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் பாஸ்கர், இணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சங்க தலைவர் சதீஸ்வரன், செயலாளர் பாலன், பொருளாளர் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.