தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்க வந்தனர் அந்த கோரிக்கை மனுவில் சுகாதார செவிலியர்களின் பணிகளை பிக்னி என்ற இணையதளத்தில் பதிவு செய்ய கொண்டு வந்தனர் அந்த பிக்னி இணையதளம் 2012 2014 ஆக இருந்தது இதில் வெர்ஷன் மாற்றப்பட்டதால் ஏப்ரல் மாதம் முதல் எந்த ஒரு ட்ரெயினிங்கும் இல்லாமல் தொடர்ந்து சுகாதார செவிலியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் நெட்வொர்க் கிடைக்காமல் இரவு நேரம் கூட பாராமல் பணிகளை செய்து வருகிறோம்.
இதனால் எங்களின் மக்கள் பணி பாதிக்க கூடாது என்பதற்காக செய்து வருகிறோம் யூவின் போர்டல் இணையதளம் கடந்தாண்டு கொண்டு வந்தனர் இது எங்களால் செய்ய முடியாது என சொல்லிவிட்டோம் மேலும் நாங்கள் பிக்னி என்ற இணையதளத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட பணிகளை பதிவு செய்து வருகிறோம் இதனால் எங்களுடைய தாய் சேய் நல பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மீண்டும் அதே இணையதளத்தில் பணிகளை செய்யுங்கள் என கூறி விட்டனர் இது சம்பந்தமாக திருச்சி மாவட்ட சுகாதார அலுவலரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று காலை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அதிகாரி இல்லாததால் காலையிலிருந்து மாலை வரை அதிகாரியை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளிக்க வேண்டும் என செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.