திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண நேரு , கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு ஒன்றிய சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து இப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம். பி துரை வைகோ கூறும்போது…
திருச்சி மாநகரில் சாலைகள் கொண்டும் குழியுமாக இருப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் விபத்துக்கள் அதிகம் நிகழ்கிறது. சாலைகள் பாதிப்படைந்துள்ள இடங்களில் விபத்துக்கள் நடப்பதாக எங்களிடம் கூறினார்கள். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் விபத்துக்கள் அதிகம் நிகழ்கிறது.இது குறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளோம். நிறைய துறை சார்ந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியை ஒதுக்காமல் உள்ளனர் குறிப்பாக சகோதர சிஷ்யா என்ற திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்க வேண்டும். எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என நடிகர் விஜய் ஸ்வீட் செய்துள்ளது எதிர்க்கட்சியாக செயல்பட விஜய் நினைக்கிறார். அரசியல் பரப்புக்காக இது போன்று அவர் செயல்படுகிறார். அண்ணாமலை போல விஜய்யும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வு விளக்கை பொருத்தவரை மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தால் நீட் விளக்கு அளித்து இருக்க முடியும் ஆனால் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது இதன் காரணமாக நீட்டு விளக்கு பெற முடியவில்லை கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நீட் விளக்கு கிடைக்கும் என கூறினார்.