திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றம்,தென்னூர் உழவர் சந்தை,திருச்சி பெரிய மிளகு பாறை ஆகிய பகுதிகளில் 70 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டு, மக்கள் மன்றத்தில் ரூ 4. 47 கோடி மதிப்பில் 75 பேருக்கும்,தென்னூர் உழவர் சந்தையில் ரூ. 7.44 கோடி மதிப்பில் 320 பேருக்கும்,திருச்சி பெரிய மிளகு பாறையில் ரூ 134.72 கோடியில் 521 பேருக்கும் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், கோ அபிஷேகபுரம் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், திமுக நிர்வாகி வாமடம் சுரேஷ், கவுன்சிலர் ராமதாஸ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..