திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு தொகுதி பொன்னகர் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி , திருச்சி மேற்கு மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர். கூட்டத்தில் மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, அந்தோணி சாமி, தொ.மு.ச. போக்குவரத்துக் கழக மண்டல பொதுச் செயலாளர் குணசேகரன், கவுன்சிலர்கள் ராமதாஸ், புஷ்பராஜ், மஞ்சுளா பாலசுப்பிரமணியன், வட்டச் செயலாளர்கள் பி.ஆர்.பால சுப்பிரமணியன், மூவேந்திரன், தனசேகர், பொருளாளர் பந்தல் எஸ். ராமு, உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-நடைபெறவுள்ள தி.மு.க முப்பெரும் விழாவை திருச்சி மாநகரத்தின் சார்பாகவும், பகுதி கழகங்களின் சார்பாகவும் வட்ட கழகங்களின் சார்பாகவும் வார்டுகளில் கொடி கம்பங்களை புதுப்பித்து கொடியேற்றி சிறப்பாக கொண்டாடுவது. கருணா நிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருச்சி மேற்கு மாநகரம் பொன்னகர் பகுதியில் உள்ள தி.மு.க அனைத்து அணிகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளரை அதிக வாக்குகள் சதவிகிதத்தில் வெற்றிபெற வைத்த பொது மக்களுக்கும், திமுக . தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறது. 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தலைவர் வேண்டு கோளின்படி 200 தொகுதிகளில் வெற்றி பெற இப்போதிலிருந்து கழகமுதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி தேர்தல் பணியினை தொடங்கி மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு பாடுபடுவது,திமுக இளைஞர் அணி செயலாளர், தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் திருச்சி மேற்கு மாநகர தி.மு.க பொன்னகர் பகுதி (மத்திய மாவட்டம்) பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.