திருச்சி மேல் கல்நாயக்கன் தெரு ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 19 ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது அதனையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு மேல் அய்யாளம்மன் படித்துறையில் இருந்து தீர்த்தம் , பால்குடம், அக்கினி சட்டி, காவடியுடன் வீதி உலாவாக வலம்வந்து கோவிலை வந்தடைந்தனர்
தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது நாளை கொலுவிருத்தல் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் மருளாளி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து விடையாற்றி நடைபெற உள்ளது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்