74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இன்று மதியம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர், ஹவ்ரா செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடமைகளை மோப்பநாய் ராக்கி உதவியுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வருகிற 26ஆம் தேதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு காவலர்கள்.
பயணிகள் கொண்டு செல்லும் உடமைகளை முழுவதுமாக ஆய்வு செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் திருச்சி ரயில் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.