திருச்சி ரயில் நிலையம் முதல் பிளாட் பாரத்தில் மர்ம சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கிடப்பதாக பயணிகள் ரயில்வே இருப்புப் பாதை காவலரிடம் தகவல் தெரிவித்தனர்.
மேலும் திருச்சி ரயில் நிலைய நிலை மேலாளர் மற்றும் இருப்பு பாதை காவல்துறையினர் அந்த மர்ம சூட்கேஸை பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் அந்தப் சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் ஒன்றும் இல்லை என தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து சூட்கேஸை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். மர்மமாக கிடந்த இந்த சூட்கேசால் திருச்சி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.