திருச்சி முடுக்குப்பட்டி சேதுராம் பிள்ளை காலனி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை சுபயோக தினத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
அதனை ஒட்டி இன்று காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்த நீர் எடுத்து வரப்பட்டது. இது அம்மா மண்டபம் வழியாக சத்திரம் பேருந்து மற்றும் தலைமை தபால் நிலையம் வழியாக கோவில் வந்து அடைந்தது .இதில் ஏராளமான பக்தர்கள் காவி உடை அணிந்து பால்குடம் எடுத்து வந்தனர் .
மேலும் நாளை காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வாஸ்து சாந்தி , வரும் இரண்டாம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மாலை மூன்றாம் யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.