திருச்சி மாவட்டம் தஞ்சை மெயின் ரோடு பழைய பால்பண்ணை அருகே உள்ள லட்சுமிபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் வருடா வருடம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் 77 வது சுதந்திர தின விழாவில்ராணுவ வீரர் வெங்கடேசன் தலைமையில் ஆட்டோ சங்கத் தலைவர் சேகர் செயலாளர் தஸ்தஹீர் பொருளாளர் சர்தார்,முன்னிலையில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
இவ்விழாவில்ஆட்டோ சங்கத்தினர் கோரிக்கையாக பெங்களூர் சேலம் நாமக்கல் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரும் பேருந்துகளிள் வரும் பயணிகள் பழைய பால்பண்ணையில் இறங்கி வேறு பேருந்துகள் மாறிச் செல்வது வழக்கமாக உள்ளது.
இது போன்ற பயணிகள் நீண்ட நேரம் பயணித்து வருவதால் அவர்களின் அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு பொது கழிப்பிட வசதி இவ்விடத்தில் இல்லை அதனால் பேருந்தில் வரும் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர் எனவே இப்பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்இதில் சங்க உறுப்பினர்கள் வெங்கடசாமி, ராஜவேல், சேட்டு (எ) பக்ருதீன், பகதூர் கான், சையது, ராமகிருஷ்ணன், சேட்டு, பாலகிருஷ்ணன்,உள்ளிட்ட உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்