திருச்சி தில்லைநகர் சிட்டி மருத்துவமனை அருகில் லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு கலந்து கொண்டு லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக குடமுருட்டி சேகர் கலந்து கொண்டார். மேலும் விழாவில் டாக்டர்கள் சதீஷ்குமார், எம்.பிரபு குமார், கல்யாணி கவரிங் உமாநாத், KMS ஹக்கீம் பிரியாணி உரிமையாளர் ஹக்கீம், மொய்தீன், ஏ1 ஹோட்டல் ஆறுமுகபெருமாள், பனானா லீப் உரிமையாளர் மனோகரன்,
மல்லியம்பத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விக்னேஸ்வரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் தமிழ்செல்வன், ஸ்ரீதர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளியின் நிர்வாக இயக்குனர் பாலாஜி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.