எம்.ஜி.ஆரின் பிறந்தநாள், அதிமுக 51 ஆம் ஆண்டு விழா – ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என்று ஒ.பி.எஸ் தெரிவித்து இருந்த நிலையில் –
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது .
முன்னதாக முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு வெல்லமண்டி முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குபா. கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், மருது அழகராஜ், அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.