தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்து பின்னர் திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடி தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். பின்னர் இன்று காலை தனியார் ஹோட்டலில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 11 மணிக்கு கார் மூலம் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.
பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்:-
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு கண்டோன்மெண்ட், பாரதிதாசன் சாலை, சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராணுவ உடை அணிந்த மாணவ மாணவிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்:-
மேலும் காரில் இருந்தபடி பொதுமக்களை நோக்கி கையசைத்து திருச்சி விமான நிலையம் நோக்கி சென்றார். பிறகு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சென்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் விமான மூலம் டெல்லி சென்றார்.