சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர், திருச்சி கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் திமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திருச்சி கேகே நகர் பகுதியை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியரும், திமுக பகுதி அவைத்தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
திருச்சி கே கே நகர் பெயரை கலைஞர் கருணாநிதி நகர் என்று முழுமையாக அழைக்கும் படி பெயர் பலகை வைக்க வேண்டும் மேலும் இப்பகுதியில் முதியவர்கள் அதிகம் இருப்பதால் பெரிய மருத்துவமனை கட்டித் தர வேண்டும் மேலும் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தர வேண்டும் மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக முதல்லரிடம் அளித்தார். முதியவர் அளித்த கோரிக்கைக்கு உடனடி தீர்வு காணப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது அருகில் அவரது மனைவி சாவித்திரி பேத்தி கீர்த்திகா ஆகியோர் உடன் இருந்தனர்.