திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதாவது கடந்த 6 மாதமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை குறிப்பாக திருச்சி சின்னசூரியூரில் 100 ஏக்கர் திரிசு நிலத்தை போலி பட்டா மூலம் பிளாட் போட்டு விற்றுள்ளார் அவருடன் திருச்சி ஆர்டிஓ சேர்ந்து கொண்டு பட்டாவை மாற்ற மறுக்கிறார்
சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று 10 வருடம் சிறை தண்டனை அனுபவித்த சுதந்திர போராட்ட வீரர் செல்லச்சாமி என்பவருக்கு வழங்கப்பட்ட 2.50 சென்ட் நிலத்தை திருவெறும்பூர் தாசில்தார் வேறு ஒருவருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்துள்ளார் இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் அமைந்துள்ள திருகாக புஜண்டா சித்த மகரிஷி கோவில் இடத்தை ஆக்கிரமிப்பதை தடுக்க கோரி கடந்த ஆறு மாதமாக மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை எனக் கூறி திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.