திருச்சி அரியமங்கலம் உக்கடை உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரிந்த நபர் இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்த போது அந்த நபர் உக்கடை பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(45) இவருக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகின்றது இவரது மனைவி தமிழ்ச்செல்வி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார் இவர்களுக் சுவேதா (15), தர்ஷினி (13) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரவிக்குமார் தனது மனைவி தமிழ்ச்செல்வி இடம் கோபித்துக் கொண்டு செங்கல்பட்டில் இருந்து உக்கடை அரியமங்கலத்தில் உள்ள தம்பி ராஜ்குமார் வீட்டில் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்துள்ளார்.கடந்த 8ம் தேதி இரவு ராஜ்குமார் வீட்டிலிருந்து அவரது செல்போன் மற்றும் 850 ரூபாய் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து கொண்டு ரவிக்குமார் சென்று விட்டதாகவும்அதனால் ரவிக்குமார் சென்னைக்கு சென்று விட்டதாக தம்பி ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நினைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு கீழ் இறந்து கிடப்பதாக ராஜ்குமாருக்கு அரியமங்கலம் போலீசார் மூலம் தகவல் கிடைத்ததுஅதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து ராஜ்குமார் இறந்து கிடந்த தனது அண்ணனை பார்த்து அடையாளம் காண்பித்துள்ளார் அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.