திருச்சி பொன்நிலைப்பட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ பனையடி கருப்பண்ண சுவாமி ஆலயத்தின் ஜூர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக கடந்த நாலாம் தேதி காவிரி ஆற்றில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக ஆஞ்சநேயர் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்கள் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலும் ஐந்தாம் தேதி முதல் கால மண்டப பூஜைகள் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தீபாராதனை சிறப்பு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆறாம் தேதி இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. மேலும் இன்று ஏழாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலையில் இருந்து கடன்கள் புறப்பட்டு கோவில்களை சுற்றி வந்து ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தெற்கு ரயில்வே டிஆர்எம் அன்பழகன், டாக்டர் இளங்கோவன், டாக்டர் வேணி, cwm ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா அன்னதானம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆஞ்சநேயர் சேவா சமிதி குழுவினர் செய்திருந்தனர்.